தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன், சுந்தர மகாகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீமிதி திருவிழா மற்றும் சுந்தர மகாகாளியம்மன் திருநடன விழா நடைபெறுவது வழக்கம். அதையொட்டி இந்தாண்டு கடந்த 18ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில், புஷ்ப அலங்காரத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை மகா மாரியம்மன் தீமிதி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 2ம் தேதி சுந்தர மகாகாளியம்மன் புறப்பாடு நடைபெற உள்ளது.