திருவிடைமருதூர்அருகே திருப்பனந்தாள் பகுதி அம்மையப்பன் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவருக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியிலுள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வயலின் நடுவே சுற்றுச்சுவா் இல்லாத கிணற்றில் மாடு தவறி விழுந்தது.
தகவலறிந்த திருவிடைமருதூா் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலா் மாறன் தலைமையில் வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனா்.