தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் பேரூராட்சியில் 2வது வார்டு அம்மன் பேட்டை மேலத்தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை குடிநீர், மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்த போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மின்விநியோகம் செய்ய மின்னாக்கி கொண்ட லாரி கொண்டு வந்தனர். இதன்மூலம் தண்ணீர் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். ஆனால் அம்மன் பேட்டை மேல் திருப்பதி மக்கள் எங்களுக்கு தண்ணீர், மின்சாரம் வேண்டாம் என்று மின்னாக்கியை கொண்டு வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.