தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூர் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் அக்11 முதல் இயக்கம்

தஞ்சாவூர் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் அக்11 முதல் இயக்கம்

தஞ்சாவூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:   தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல்நேர இன்டர் சிட்டி ரயில் இயக்குவது, திருச்சி - பாலக்காடு, திருச்சி - ஹவுரா ரயில்களை தஞ்சாவூரில் இருந்து இயக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி மக்களுக்காக கம்பன் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக செல்லும் ராமேஸ்வரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வைத்தோம். இதில் செகந்தரபாத் – ராமநாதபுரம் ரயிலை பேராவூரணியில் ஒரு நிமிடம் நிறுத்தவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள் கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பகல்நேர இன்டர் சிட்டி ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். வரும் அக். 11 ஆம் தேதி முதல் மூன்று மாதம் சோதனை ஓட்டமாக திருச்சியில் அதிகாலை 5. 35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு காலை 6: 25 மணிக்கு வந்தடையும். தாம்பரத்துக்கு மதியம் 12. 35 மணிக்கு சென்றடையும். பின்னர் மறுமார்க்கத்தில் இருந்து மாலை 3: 35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில் புறபட்டு, இரவு 10. 15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து சேரும்" என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా