தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சை: முதலீடு செய்தால் வாகனம் என மோசடி; 2 பேர் கைது

தஞ்சை: முதலீடு செய்தால் வாகனம் என மோசடி; 2 பேர் கைது

தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு "குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கித் தரப்படும்" என அறிவித்தது. அதைப்பார்த்த தஞ்சை மேலவீதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் அதை நம்பி சிறு தொகையினை கட்டி இருசக்கர வாகனத்தை வாங்கினார். அதன் பின்னர் மேலும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 4 சக்கர வாகனம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்தொகையாக ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் தொகையினை பெற்று ஏமாற்றி உள்ளனர்.  இதுபோன்று அந்த நிறுவனம் 22 நபர்களிடமும் பண மோசடி செய்ததாக வைத்தீஸ்வரன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அந்த நிறுவனம் ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அர்பஷ் (வயது 46), சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் (30) ஆகியோர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்கள் கோயம்புத்தூரில் இருப்பதாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் கோயம்புத்தூர் சென்று அர்பஷ், ஹரி பிரசாத் ஆகிய 2 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా