பேராவூரணி - Peravurani

நகை மோசடி வழக்கில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கைது

நகை மோசடி வழக்கில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கைது

சிவகங்கை மாவட்டம் கல்லலில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை கோட்டைகுளம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 34) என்பவரும், துணை மேலாளராக காளையார்கோவிலை அடுத்த புலிகண்மாயை சேர்ந்த ராஜாத்தி (38) என்பவரும் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் வங்கியில் பொதுமக்கள் அடகுவைத்து இருந்த 533 பவுன் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மீண்டும் அடகுவைத்து ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரத்து 973 கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து தனியார் வங்கி மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்..

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా