பேராவூரணி கடைமடைக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
கடைமடைப் பகுதி பாசனத்துக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சி. வீரமணி தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் துரை. பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.  
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
ஆர்ப்பாட்டத்தில் பேராவூரணி கடைமடைப் பகுதி என்பதால் குறுவை சாகுபடி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒருபோக சம்பா சாகுபடியை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளுக்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்படுவதால் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கடைமடை பாசன பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்பி தர வேண்டும். தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய வாய்க்கால்கள், மதகுகள், பாலங்களை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி