சேதுபாவாசத்திரம்: சம்பா நெற்பயிருக்கு காப்பீடு.. நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

82பார்த்தது
சேதுபாவாசத்திரம்: சம்பா நெற்பயிருக்கு காப்பீடு.. நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிட புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் நடப்பு சம்பா சாகுபடிக்கு பயிருக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. நமது தஞ்சை மாவட்டத்திற்கு சம்பா பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தைசெயல்படுத்திட ஷீமா பொதுக் காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்த நவம்பர் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக அல்லது பொது ஈசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் தாமதம் இன்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி