பேராவூரணி - Peravurani

தஞ்சை: விதி மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சை: விதி மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சை மாவட்டத்தில் விதி முறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பட்டாசு வெடிப்பது குறித்து கண்காணிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా