பேராவூரணி: விதைப் பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி

53பார்த்தது
பேராவூரணி: விதைப் பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திர வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஒரு நாள் தொழில் நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை மூலம் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி. சாந்தி விதைப் பண்ணை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

பேராவூரணி விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் தரமான விதை உற்பத்தி குறித்தும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் பாலகிருஷ்ணன் நீர், களை நிர்வாகம், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.

தொடர்புடைய செய்தி