பேராவூரணி அருகே பெருமகளூர்
வலையன்வயல் கிராமத்தில் ரூ. 19 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 168 அடுக்குமாடி குடியிருப்புகளை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெருமகளூர் வலையன்வயலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம். எல். ஏக்கள் துரைசந்திரசேகரன், அண்ணாதுரை, அசோக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளை பார்வையிட்டனர். பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும், தலா ரூ. 2 லட்சத்து 82 ஆயிரம் செலுத்தும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. குடியிருப்புக்கான தொகையை தவணையாகவும் செலுத்தலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை ஆர். டி. ஓ ஜெயஸ்ரீ, தாசில்தார் தெய்வானை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவர் முத்து மாணிக்கம், திமுக ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல்மஜீத், ரூஸ்வெல்ட், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருச்சி கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆதித்யன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.