பேராவூரணி - Peravurani

தஞ்சை:;முன்விரோத மோதல், மீனவருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சை:;முன்விரோத மோதல், மீனவருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் தம்பிதுரை (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கேசவ மூர்த்தி (வயது 20), இவர்கள் மீனவர்கள். இருவருக்கும் இடப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்கடா கடற்கரையில் இருவரும் தங்கள் ஃபைபர் படகுகளை அருகருகே நிறுத்தி இருந்தனர். கடற்கரையில் கடல் அலை சீற்றம் காரணமாக ஃபைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டனர். இதில் தம்பி துரைக்கும், கேசவமூர்த்திக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.   இதில் ஆத்திரம் அடைந்த கேசவமூர்த்தி தம்பிதுரையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தம்பிதுரைக்கு கழுத்துக்கு கீழ் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் கேசவ மூர்த்தி தந்தை செல்வராஜூம் காயமடைந்தார். காயமடைந்த இருவரும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   இது தொடர்பான புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் ஆய்வாளர் மஞ்சுளா, சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, தலைமை காவலர் பழனிவேல் ஆகியோர் வழக்குப் பதிந்து கேசவமூர்த்தி, அவரது சகோதரர் வைரமூர்த்தி (வயது 23) ஆகிய இருவரையும் கைது செய்து, பேராவூரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా