RR அணியில் இருந்து ஜாஸ் பட்லர் விடுவிக்கப்பட்ட நிலையில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த PINK ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.