இந்தி சினிமாவில் 'கிங் கான்' என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நேற்று (நவ.02) அவரது 59-வது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்பொழுது நடைப்பெற்ற மீட் அண்ட் கிரீட் என்ற பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் "நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது" என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.