நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “சொந்த மண்ணிலேயே 0-3 என தோற்றதை ஏற்றுக் கொள்வது சற்று கடினம்தான். ஆனால் தோல்விக்கு காரணம் என்ன என சுயபரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். போதிய பயிற்சி இல்லையா? அல்லது நன்றாக விளையாடவில்லையா? என தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.