தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு சீப்பை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். சீப்பில் சேரும் அழுக்குகள் தலையில் தொற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே சீப்புகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். இளம்சூட்டில் உள்ள நீரில் சிறிது சோப்புத் தண்ணீரை ஊற்றி, சீப்புகளை ஊற வைக்க வேண்டும். பின்னர் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் போகும் வரை பிரஷ் கொண்டு கழுவ வேண்டும். 6 - 8 மாதங்கள் வரை மட்டுமே ஒரு சீப்பை உபயோகிக்க வேண்டும்.