தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி,
கடந்த 4ஆம் தேதி துறை உயர் அலுவலர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.