அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 210 எலக்டோரல் வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 277 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.