தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, செருவாவிடுதி வடக்கு ஊராட்சியில், ஆவுடைத்தெருவில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7. 50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ. இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர் ரா. த. விஜயராமன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ரா. த. பன்னீர்செல்வம், இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். கே. பி குமார், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், திருப்பதி, சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.