அமெரிக்க அதிபர் தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் போட்டியிட்டார். இவரது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இந்த தேர்தலிலும் ஜனநாயக கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.