ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செராமிக் கொண்டு வெள்ளை பூச்சை உருவாக்கி இருக்கின்றனர். இதை வீட்டின் கூரை மேல் பூசினால் போதும். தன் மீது படும் 99.6% ஒளியை திருப்பி அனுப்பிவிடும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் அதிகபட்ச பிரதிபலிப்புத் திறனை இந்த பூச்சு கொண்டுள்ளது. 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாங்கும். ஏ.சிக்கு விடை கொடுத்து இது போன்ற பூச்சுகளை பூசுவதன் மூலமாக, கரண்ட் பில் குறையும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.