திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை விஸ்வநாதர் திருக்கோயிலின் கந்த சஷ்டி விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாகன திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி ஆக வள்ளி தெய்வானை தேவியர்களுடன் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழா கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்தன விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது முன்னதாக உற்சவர் முருகப்பெருமானை வள்ளி தெய்வானை தேவியர்களுடன் மனக்கோளத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் திருமண சடங்கு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு பூணல் அணிவித்தல் கன்னிகா தானம் மாலை மாற்றுதல் போன்ற பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரர்கள் வேத மந்திரங்கள் முழங்க தெய்வானை தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அலங்கார தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வத் திருக்கல்யாணத்தை கண்டு வழிபாடு செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

வீடியோஸ்


சிவகங்கை
Nov 09, 2024, 17:11 IST/சிவகங்கை
சிவகங்கை

மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி

Nov 09, 2024, 17:11 IST
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் ஒரு வகையான வைரல் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் கால்வாய், வடிகால் அடைப்பாலும், பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததாலும் மழைநீர் தேங்கியுள்ளன.  கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அதேபோல் காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் அன்மையில் சொந்த ஊர் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.