திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை விஸ்வநாதர் திருக்கோயிலின் கந்த சஷ்டி விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாகன திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோவிலில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி ஆக வள்ளி தெய்வானை தேவியர்களுடன் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழா கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்தன விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது முன்னதாக உற்சவர் முருகப்பெருமானை வள்ளி தெய்வானை தேவியர்களுடன் மனக்கோளத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் திருமண சடங்கு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு பூணல் அணிவித்தல் கன்னிகா தானம் மாலை மாற்றுதல் போன்ற பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரர்கள் வேத மந்திரங்கள் முழங்க தெய்வானை தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அலங்கார தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வத் திருக்கல்யாணத்தை கண்டு வழிபாடு செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

வீடியோஸ்


சிவகங்கை