திருப்பத்தூர் - Tiruppattur

தட்டான் குளத்தில் நிரம்பி வழியும் நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டார விவசாயிகள் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் செய்கின்றனர். தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. பாசன தேவைகளுக்காகவும் நிலத்தடி நீராதாரத்திற்காகவும் வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தட்டான்குளம், மாரநாடு தடுப்பணைகள் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வைகை ஆற்றில் மழைதண்ணீர் இரண்டாயிரம் கன அடி வரை வருகிறது. தட்டான்குளம் தடுப்பணை இதனால் நிரம்பி வழிகிறது. மதுரை, தேனி மாவட்டங்களில் மழை குறையும் பட்சத்தில் நீர்வரத்தும் குறைய வாய்ப்புஉண்டு. பிரமனுார் கண்மாய் நிரம்பி உபரி நீர் கிருதுமால் நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. தட்டான்குளம் தடுப்பணை நிரம்பி வழிவதால் தடுப்பணையை சுற்றியுள்ள தட்டான்குளம், கழுகேர்கடை, அதிகரை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இனி ஜனவரி வரை நீர்வரத்து வர வாய்ப்புள்ளதால் தட்டான்குளம் தடுப்பணையில் நான்கு மாதம் வரை தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்

சிவகங்கை
தட்டான் குளத்தில் நிரம்பி வழியும் நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
Nov 09, 2024, 17:11 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

தட்டான் குளத்தில் நிரம்பி வழியும் நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி

Nov 09, 2024, 17:11 IST