சிவகங்கை: அவசரகால மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த நீதிபதி
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அவசரகால மருத்துவ சிகிச்சை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் அவர்கள் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்தில் அவசரகால மருத்துவ சிகிச்சை, ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு பலன் பெறலாம் என தெரிவித்தார்.