சிவகங்கை: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

52பார்த்தது
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது துவங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இங்கு அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, 300 படுக்கை பிரிவு, 500 படுக்கை பிரிவு, தாய் சேய் நல சிறப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருவதுடன் சிவகங்கை மாவட்டம் மட்டுமில்லாமல், அருகில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் இங்கு வந்து சிகிச்சை பெருகின்றனர். 

தினசரி வெளிநோயாளிகளாக ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக ஆயிரம்பேர் என அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் இங்கு சில நாட்களாக மருத்துவர்கள் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இன்று ஆட்சியர் ஆஷா அஜித் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

முதலாவதாக தாய் சேய் நலப்பிரிவில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கிருந்த கர்ப்பினி பெண்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பின்னர் அவசர கால சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த நோயாளிகளிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளின் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யவும் முதல்வர் சத்தியபாமாவிற்கு அறிவுருத்தி சென்றார்.
Job Suitcase

Jobs near you