நாம் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்று பிஸ்கட். ஆனால், பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதில் சுவை, நிறம் மற்றும் பதப்படுத்தல் காரணங்களுக்காக பயன்படுத்தும் வேதிப்பொருள்களும் உடலுக்குக் கேடு விளைவிக்கலாம். பிஸ்கட் எவ்வளவு மிருதுவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு புரதச்சத்து நிறைந்ததாக இருக்கும். ஆனால், இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும், இதய நோய் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.