மும்பையில் உள்ள விடுதியில், குஜராத்தைச் சேர்ந்த 41 வயதுடைய வைர நிறுவன மேலாளர் ஒருவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் இறந்தவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த சிறுமியை குஜராத்தில் இருந்து பணிக்காக அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.