சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா நடைபெற்று வருகிறது இவ்விழாவின் ஒரு நிகழ்வாக சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது முன்னதாக மூலவர் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து கோவில் மண்டபத்தில் ஆறுபடை வீடுகளின் முருகப்பெருமான் உற்சவ தெய்வங்களாக எழுந்தருள செய்தனர் பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாகபூஜைகள் துவங்கியது தொடர்ந்து யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பழங்கள் பொங்கல் புஷ்பங்கள் சமர்ப்பித்து சத்துரு சம்ஹார ஹோமத்தை நடத்தினர் இதனெடுத்து வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாகுதி பூமாலைகள் சமர்ப்பித்து சண்முக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் சண்முக முருகப்பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க சங்கில் உள்ள பால் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது நிறைவாக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.