கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்.

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே செம்பனூர் கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம். முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திண்டுக்கல், , காரைக்குடி நெடுஞ்
சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 13 ஜோடிகளும், சிறிய மாட்டு பிரிவில் 27ஜோடி மாடுகள் என 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களில் வந்து மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி