சிவகங்கை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி
சிவகங்கையில் அதிமுக களஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்கள் செம்மலை, ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானியை சந்தித்தது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வெற்றிகரமான கூட்டணியை பழனிசாமி அமைப்பார். தேர்தலுக்கு களப்பணிக்கு தயார் செய்யும் வேலையை செய்துவருகிறோம். கூட்டணி ஆட்சி குறித்து பேச வேண்டிய நேரம் இது அல்ல. அதிமுக கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அதே வரலாற்றை மீண்டும் படைக்க முடியும். எனினும் நாங்கள் கூட்டணியை வேண்டாம் என சொல்லமாட்டோம். குடும்பக்கட்சி பிரச்சினைக்கே முதல்வருக்கு நேரம் போதுமானதாக உள்ளது என்றார்.