தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (நவம்பர் 25) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.