சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நேர்மையாக பணியாற்றிய தூய்மை காவலர்களை பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவப்படுத்தினர். நாலு கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜுனன். இவர் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகாக ரூ. 1லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி துணிப்பையில் வைத்துள்ளார். இதனை கவனக்குறைவாக வீட்டில் உள்ளவர்கள் குப்பையில் போட்டு உள்ளனர். அதனை சாந்தி, முத்திருளாயி என்ற இரு பெண் தூய்மை காவலர்கள் தரம் பிரிக்கும் போது பார்த்து, ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.
இவர்களை கௌரவிக்கும் விதமாக இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் எளிமையான சூழலிலும் நேர்மை தவறாக இரு தூய்மை பணியாளர்களையும் அழைத்து அனைவரது முன்னிலையிலும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இவர்களைப் பொதுமக்கள் பலரும் கைதட்டியும் கைகுலுக்கியும் இன்று மதியம் சுமார் மூன்று முப்பது மணி அளவில் பாராட்டு தெரிவித்தனர்.