முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி

73பார்த்தது
சிவகங்கையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அமைப்புச் செயலாளர்கள் செம்மலை, ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
அதானியை சந்தித்தது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் வெற்றிகரமான கூட்டணியை பழனிசாமி அமைப்பார். தேர்தலுக்கு களப்பணிக்கு தயார் செய்யும் வேலையை செய்து வருகிறோம். கூட்டணி ஆட்சி குறித்து பேச வேண்டிய நேரம் இது அல்ல. அதிமுக கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அதே வரலாற்றை மீண்டும் படைக்க முடியும். எனினும் நாங்கள் கூட்டணியை வேண்டாம் எனச் சொல்ல மாட்டோம்.
குடும்பம் க ட் சி பிரச்சினைக்கே முதல்வருக்கு நேரம் போதுமானதாக உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி