தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பீரவீன் உமேஷ், தலைமையில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயுதப்படை காவலர்கள், 37 சிறப்புக் காவல்படை காவலர்கள், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை காவலர்கள் ஆகிய மொத்தம் 69 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9-ம் அணி தளவாய் கார்த்திகேயன், சிவகங்கை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், துணைத் தளவாய் ஸ்ரீதேவி, சிவகங்கை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி அலுவலர் செந்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் (நிர்வாகம்) அசோக் ராஜ்குமார், நிர்வாக அலுவலர் வசந்தகுமாரி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் கலந்து கொண்டனர்.