சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளின் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை நேர்காணல் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு இன்று திங்கள்கிழமை முதல் 5 நாட்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த காலிப் பணியிடங்களுக்கு 4, 247 நபர்கள் விண்ணப்பத்துள்ளனர். இதில் பல்வேறு காரணங்களுக்காக 182 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மீதமுழ்ழ 4, 065 பேர் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில். சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் 130 கலந்து கொண்டு நடத்தினர். முதல் நாளில், காலை , மாலை இருவேளைகளிலும் நடத்தப்பட்ட இந்த நேர்காணலுக்கு 800 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டதில், 488 பேர் இன்று மாலை சுமார் 4 மணி வரை கலந்து கொண்டனர்.