சிவகங்கையில் பெற்றோர்கள், ஆசிரியருடன் வாக்குவாதம்.

77பார்த்தது
சிவகங்கை, மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பழமையான இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த மாதம் தாமதமாக வந்த இது மாணவிகளை கண்டித்ததை தொடர்ந்து அவர்களது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துள்ளனர். இன்று பள்ளியில் டிசி வாங்கிச் செல்ல அந்த மாணவியின் தாய் வந்துள்ளார். அப்போது ஆசிரியர்கள் மாணவிகளிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியை அறிவுரை கூறியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட அந்த பயிற்சி ஆசிரியை தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த உறவினர்களை சமாதானம் செய்து வெளியேற்றினர். இது தொடர்பாக ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி