வழக்கறிஞரை தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வ உ சி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் காந்தி, பால்கரசு ஆகிய இருவருக்கிடையே இட தகராறு இருந்து வந்த நிலையில் காந்திக்கு ஆதரவாக காளையார்கோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்கேயன் பிரச்சனைக்குரிய இடத்தில் காந்தியுடன் சேர்ந்து எல்லை கல்லை நடுவதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படும் நிலையில் இதற்கு பால் கரசு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் காவல் உதவி ஆய்வாளர் பால் கரசு மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து பால் கரசு தனது வழக்கறிஞரிடம் தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த வழக்கறிஞரை செல்போனை பறித்து வழக்கறிஞர் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில்
வழக்கறிஞர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் அவரது மனைவி பெண் வழக்கறிஞர் பூர்ணிமா காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்கேயன் மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்
வழக்கறிஞரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக சொல்லப்படும் சம்பவம் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி