தமிழ்நாட்டில்தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குநரகம் அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறு சேமிப்பு இயக்குநரகம் ஆகியவை கலைக்கப்பட்டு, அவற்றின் தலைமைப் பதவிகள் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைக்கபடுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியராக நுழைவாயில் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரவியம் தலைமை வகித்தார்இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய சங்கத்தினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.