சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025 பணியின் மேற்பார்வையாளர் மற்றும் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, அவர்கள், இன்று மானாமதுரை மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டமும் மேற்கொண்டு தெரிவிக்கையில்:
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று, அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றார்.