கெட்டுப் போன மீன்கள் விற்ற மூன்று கடைக்கு அபரதம்

83பார்த்தது
சிவகங்கை வாரச்சந்தை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரை எடுத்து உணவுத்துறை
மீன்வளத்துறை
அதிகாரிகள் இன்று சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்ததோடு அபராதம் விதித்தனர்.
சிவகங்கையில் புதன்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று சந்தையில் மீன் விற்பனை நடந்து வந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சரவணன் தலைமையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோர்திடீரென சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கெட்டுப்போனமீன்கள் சுமார் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது மேலும் 3 கடைகளுக்கு தலா 2000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினார்கள் கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். அதே போன்று சிவகங்கை நேரு பஜார் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பை 50 கிலோ அளவிலான பைகளை.
பறிமுதல் செய்து இன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி