மானமதுரை - Manamadurai

சிவகங்கை: 1080 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சிவகங்கை: 1080 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி போஸ் மகன் செல்வராஜ் (31) ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அதில் 30 மூட்டைகளில் 1080 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவதை கண்டறிந்தனர். வெள்ளிக்குறிச்சி, திருப்பாச்சேத்தியில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து விற்பனைக்காக கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காருடன், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.

வீடியோஸ்


சிவகங்கை
முத்துப்பட்டினத்தில் குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்
Oct 07, 2024, 17:10 IST/காரைக்குடி
காரைக்குடி

முத்துப்பட்டினத்தில் குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்

Oct 07, 2024, 17:10 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முத்துப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. தவிர, வீடுகள் கடைகளில் உணவுப் பொருட்களை குரங்குகள் தூக்கிச் செல்கின்றன. மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும் குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.