கிளிப்புகளை கழற்றிய சம்பவத்தில் 2 பேர் கைது

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தண்டவாளத்தில் க்ளிப்புகளை கழற்றிய சம்பவத்தில் சட்டீஸ்கர் தொழிலாளர்கள் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சூடியூர் இடையே செப். 16-ம் தேதி தண்டவாள பராமரிப்பாளர் தண்டவாளத்தைஆய்வு செய்தார். அப்போது தண்டவாளம்அசையாமல் இருக்க பொருத்தப்பட்டிருந்த கிளிப்புகள் கழன்று கிடந்தன. அவர் கொடுத்த தகவலை அடுத்து அவ்வழியாக வந்த ரயில்கள்பாதி வழியில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்துரயில்வே ஊழியர்கள் கிளிப்புகளைபொருத்திய பின்னர் தொடர்ந்து ரயில்கள்இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வேஇன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில்தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் தண்டவாளபராமரிப்பு பணியை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. அந்நிறுவனம் சட்டீஸ்கர்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
மானாமதுரைபகுதிகளில் பணி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சொன்னதை விட குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த சிலர் ஒப்பந்த நிறுவனத்தை மாட்டி விடுவதற்காக தண்டவாள கிளிப்புகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த சுரேஸ்அகரியா (24), நித்தேஸ்குமார் (21) ஆகிய இருவரை மானாமதுரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி