பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள்

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ளது உச்சிமாகாளி அம்மன் கோயில், இந்த கோயிலுக்கு வெளியே வீரசின் என்ற தெய்வத்தின் பீடம் உள்ளது, இந்த கோவில் பீடத்தை சுற்றி தனியார் பேக்கரி முற்றிலும் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வருகிறது, தற்போது இப்பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் முளைப்பாரி திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாட இருக்கிறார்கள், ஆனா அந்த பீடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடைக்காரர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது அவர்கள் ஆக்கிரமிப்பு எடுக்க சம்மதிக்கவில்லை இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பு அகற்றக் கூறி கோசமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது மேலும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றக் கூறி செயல் அலுவலரிடம் இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் பொதுமக்கள் புகார் மனுவை கொடுத்தனர் இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் செயல் அலுவலர் கூறவே அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி