சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள திருப்புவனம் நகரில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மஹாலய அமாவாசை திருநாளை முன்னிட்டு அது காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் கொடுக்கும் கோவில் தளமாக திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது கோவிலில் சாதாரண நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி அம்மனை வழிபட்டு செல்கின்றனர் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பணம் செய்து சூரியபகவானை வழிபாடு செய்தனர் தொடர்ந்து விநாயகர் பெருமானையும் புஷ்பனேஸ்வர ஸ்வாமி சௌந்தர நாயகி அம்மனையும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.