மதுக்கடையை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானம்

70பார்த்தது
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் விரிவடைந்த பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தை மாநில தலைவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் விருதுநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி. இராமசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பா மருது மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டி மீனா மஞ்சுளா சிவகங்கை நகர செயலாளர் சகாயம் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக மாநில அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். சிவகங்கை நகர் முழுவதும் எவ்வித திட்டமிடல் இன்றி நகராட்சி நிர்வாகம் சாக்கடைகளை தோண்டி தெருக்களில் போட்டு அதனை அப்புறப்படுத்தாமலும் எவ்வித வேலையும் செய்யாமலும் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பழைய மருத்துவமனை அருகில் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தனியார் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் சிவகங்கை மருத்துவக் கல்லூரியை சுற்றி மண்டியுள்ள புதர்களை உடனடியாக அகற்றிட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி