காளையார்கோவில்: முத்தூரில் குவாரிக்கு தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு

74பார்த்தது
காளையார்கோவில்: முத்தூரில் குவாரிக்கு தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிறுசெங்குளிப்பட்டி பெருமாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முத்தூரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தில் கிராவல் மண் குவாரி நடத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது. மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஊராட்சி ரோடு சேதமடைகிறது. குவாரியால் அருகிலுள்ள கண்மாய், இதர நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. குவாரி பள்ளத்தில் மழை நீர் தேங்கினால் மனிதர்கள், விலங்குகள் மூழ்கி பலியாக வாய்ப்புள்ளது.

குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும். அதற்கான உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர், கனிமவள துணை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வு: குவாரி செயல்பட இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி