சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மஹாலய அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் காலை முதல் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர் இதில் பங்கேற்றவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக தர்ப்பண பொருட்கள் எள், பூ, வாழைப்பழம் வழங்கப்பட்டது , இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சிவகங்கை மதுரை காரைக்குடி உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று மதியம் சுமார் ஒரு மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.