கந்தூரி அசைவ அன்னதான விழா; கூடிய கிராம மக்கள்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் அருகே உள்ள சிவலாதி கிராமத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் கொண்டாடும் கந்தூரி அசைவ அன்னதான விழாஇளையான்குடி தாலுகா சிவலாதி கிராமத்தில் அமைந்துள்ளது கண்டுமேய்க்கி தர்கா.

இந்ததர்காவில் ஒரு ஆண் மற்றும் பெண் என்ற இரு இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல தலைமுறைகளாக சீவலாதி கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கண்டு மேய்க்கி தர்காவை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்,

மேலும் வருடந்தோறும் கிராம மக்கள் ஆடுகள் மற்றும் சேவல்களை பலியிட்டு உணவுஅப்பகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்படுவது வழக்கம் இந்நிலையில் இன்று (அக்.,4) 100 க்கும் மேற்பட்ட கிடாக்கள் 100மேற்பட்ட சேவல்களை நேத்திகடனாக படைத்து அனைத்து இஸ்லாமியர்கள், இந்துக்கள், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாரபட்சமின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து கரிசோறு விருந்து அளித்து உணவருந்தினர் இந்நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.

தொடர்புடைய செய்தி