கீழடி அகழாய்வில் கலைநயம் மிக்க சுடுமண் தொட்டி கண்டெடுப்பு.

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தமிழகத் தொல்லியல் துறை மூலம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 50க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டகாய், தா என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள் , சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. 9வதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி விட்டம் கொண்ட சுடுமண் தொட்டி ஒரு அடி உயரம் வரை மேற்பகுதி மட்டும் வெளிப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் கலைநயம் மிக்க வளைவான கோடுகள் உள்ளன. 7ம் கட்ட அகழாய்வின் போது மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறும், சுடுமண் தொட்டியின் பக்கவாட்டு பகுதியில் கயிறு போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டது. 10ம் கட்ட அகழாய்வும் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் து£ரத்திலேயே நடந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள சுடுமண் தொட்டி அருகிலேயே இருவண்ண சுடுமண் பானை, கொடி போன்று வரையப்பட்ட பானை , வளைவான கோடுகள் கொண்ட பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. , கலைநயம் மிக்க சுடுமண் தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்னும் அடியில் தோண்டும் போது தான் இது உறை கிணறா என்பது தெரியவரும் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி